நவசக்தி கணபதி
பல்லவி
குன்றாதபுகழுடைய
குறைதீர்க்கும் கரிமுகனை
அன்றாடம் துதித்தேன்
எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
குன்றேந்தி நின்ற
கேசவன் மருகனை
குன்றுதோராடும்
குமரனின் சோதரனை
சரணம்
பொன்னிறமேனியனை கொம்பொன்றுடையவனை
தன்னுடல் பருத்தவனை பெருவயிறு படைத்தவனை
மின்னுமொளி திகழுமகன்ற கண்ணுடையானை
தன்னடி பணிவோர்க்கு நன்னலமளிக்கும்
(“Ekadantam Mahaakaayan,
Taptakaajnchanasannibhamh
Lambodaram Vishaalaaxam, Vandeaham Gananaayakamh”
Meaning of Sloka: Obeisance to Lord Ganesha, the one tusked, huge-bodied, big-bellied, and large-eyed God, whose complexion is like that of molten gold. I surrender myself to such great lord.)

இன்னிசைக்கலைவாணர் பாடிப்பரவும்
பொன்னடியானை மோதகக்கையனை
பன்னகபூஷணன் கபாலியின் மகனை
சென்னைத்திருமயிலை நவசக்தி கணபதியை
No comments:
Post a Comment