ஆதிதேவன்
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும்
மகாகணபதியை
சங்கரி மைந்தனை
மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன்
மருகனை
சங்கடமிடர் நீக்கும்
விக்னவிநாயகனை
சரணம்
பூதகணங்களின் நாதனைக் கரிமுகனை
வேதங்கள் போற்றும்
வேழமுகத்தோனை
நாத சங்கீத வாத்திய
ரசிகனை
ஆதிதேவனை மோதகப்பிரியனை
No comments:
Post a Comment