Wednesday, 19 March 2014

கற்பக கணபதி




கற்பக கணபதி

பல்லவி

கற்பாம்பிகை மகனை கணபதியைப் பணிந்தேன்
நற்கதி எனக்கருள வேண்டுமெனத்துதித்து

அனுபல்லவி

தற்பரன் சிவனின் மனங்கவர் ஈச்வரி
வெற்பரையன் மகள் கேசவன் சோதரி

சரணம்

முற்பிறப்பில் செய்த வினைப்பயன் தொலையவும்
அற்பவாழ்வில்பிழை செய்யாதிருக்கவும்
கற்பக கணபதியை காரமர் மேனியனை
விற்பன்னர் போற்றும் பொற்பதத்தானை




No comments:

Post a Comment