ஸ்ரீ லலிதாம்பிகை
பல்லவி
துர்காலக்ஷ்மி சரஸ்வதி
மூவரும் நீயே லலிதாம்பிகையே
துரிதம்
நரர்சுரர் முனிவர்கள் சுகசனகாதியர்
அரனரியயனும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
சர்வமங்களே ராஜராஜேஸ்வரி
சர்வமும் நீயே கேசவன் சோதரி
சரணம்
தர்மம் தழைத்திட தரணியிலவதரித்த
தர்மசம்வர்த்தனி திரிபுரசுந்தரி
கர்மவினைப்பயனால் கட்டுண்ட எனையே
வர்மம் வைத்திடாமல் காத்தருள்வாயே
No comments:
Post a Comment