Thursday, 13 March 2014

நந்தகுமாரன்







நந்தகுமாரன்

பல்லவி

நந்தகுமாரன் யதுநந்தனுக்கு
சந்தனம் பன்னீர் பூசிமகிழ்ந்தனர்

அனுபல்லவி

சுந்தரிகள் முத்துப்பலழகி கோபியர்
சுந்தரன் பாலகோபலனுக்கு

சரணம்

கலகலப்பான முகம் கண்டு சொக்கி
அமுதொழுகப் பேசும் அழகிய மாயனுக்கு
திலகம் திருத்தி மீண்டும் ஒருமுறை
கஸ்தூரித்திலகமிட்டுச்சந்தனம் பூசினர்

ஆயர்குலபாலருடன் அவர்களையாண்டருளும்
அகன்ற கண்ணுடைய விசால கண்ணனுக்கு
சேலைகட்டி சரிகைச்சேலைக்கட்டி
பார்த்து மகிழ்ந்து சந்தனம் பூசினர்

பாரோர் புகழும் நேரிழை கோபியர்
நாரீமணிகள் இளமை குன்றாத
கமலகண்ணன் கோபாலனவனுக்கு
ஆரத்தியெடுத்தனர் மங்கள ஆரத்தியெடுத்தனர்

தவனம் மருக்கொழுந்து இருவாட்சி சாதிமல்லி
கவனமுடனெடுத்துக் “கேசவன்” திருவடியில்
உவகையுடன் தூவி மனமார வேண்டி – குரு
பவனபுர நாதனுக்கு வழிபாடு செய்தனர்





influenced by
(  நௌகச்சரித்திரம்  தியாகராஜா )



No comments:

Post a Comment