கற்றுத்தரும் கணபதி
பல்லவி
கற்றுத்தரும் கணபதியை மனமாரத்துதித்தேன்
உற்ற துணை இவ்வுலகிலவனெனவேயறிந்து
அனுபல்லவி
நற்றவ முனிவரும் ஞானியரும் வித்தகரும்
புத்தியில் வைத்து நித்தமும் போற்றும்
சரணம்
பற்றறுக்க வழிகாட்டுமங்குசமொருகரத்தில்
மற்றொன்றிலுழைப்புக்கு பரிசாக மோதகமும்
ஒற்றைக்கொம்பை இழந்தது மற்றொன்றை
பெற்றிடவே என்றுணர்த்தும் சீரிய பாங்கும்
மற்றவர் கூற்றைக் கேட்பதற்கு பெருங்காதும்
சற்றே பெருவயிறு குற்றம் குணம் ஏற்கவும்
மாற்றி யோசிக்கும் பெரிய தலையும்
ஆற்றல்மிகு அழகிய தொலைநோக்குக் கண்களும்
சுற்றித்திரிந்திடவும் எளிதிலெங்கும் செல்லவும்
முற்றும் பொருத்தமான சிறிய வாகனமும்
பக்தருடன் பகிர்ந்துண்ணும் நைவேத்தியுமும்
இத்தனையும் நமக்குணர்த்தும் கேசவன் மருகனை
No comments:
Post a Comment