வர்ண கணபதி
பல்லவி
வண்ணங்கள் நிறைந்த ஆனைமுகத்தோனை
கண்ணாரக்கண்டு உளமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தண்மதி பிறையை சூடிய கரிமுகனை
வெண்கலையணிந்த வேழமுகத்தோனை
சரணம்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து போற்றும்
புண்ணியனை பூத கணங்களின் தலைவனை
கண் மூன்றுடைய காலாந்தகன் மகனை
கண்பார்த்தெனையே காத்தருள வேண்டுமென
எண்ணித்துதித்திடும் அடியார்க்கருள்பவனை
மண்ணுண்ட வாயன் கேசவன் மருகனை
வண்ண மயில் வாகனன் முத்துக்குமரனின்
அண்ணனை சுமுகனை வேழமுகத்தோனை
எண்ணித்துதித்திடும் அடியார்க்கருள்பவனை
மண்ணுண்ட வாயன் கேசவன் மருகனை
வண்ண மயில் வாகனன் முத்துக்குமரனின்
அண்ணனை சுமுகனை வேழமுகத்தோனை
No comments:
Post a Comment