Tuesday, 11 March 2014

கண்ணன் லீலைகள்(2)







கண்ணன் லீலைகள்(2)

(Narayaneeyam-Dasakam) 47 - Yashodha binding Krishna to the Mortar


பல்லவி

குருவாயுரப்பாவுன் அருளாலே இன்று

பெருமையுடனுனைப் பாடும் பாக்கியம் பெற்றேன்

அனுபல்லவி

வருமிடர் தவிர்த்திந்த நற்பணி தொடர்ந்திட

கேசவனே உனது திருவடி பணிந்தேன்

சரணம்

தயிர் கடையும் வேளையில் கண்ணன் தன் தாயின்

மடிமீதேறி முலையுண்ணலானான்

புன்சிரிப்புடனே கமலமொட்டு முலையில்

பால் குடிக்கும் கண்ணனை கீழிறக்கிவிட்டு


பொங்கியடுப்பில் விழும் பாலைத் தடுத்திட

அன்னை யசோதை ஓடோடிச் சென்றாள்

முலையுண்ணும் களிப்பை பாதியில் நிறுத்தியதும்

கோபமுற்றுக் கண்ணன் தயிர்பானையை யுடைத்தான்


ஓசை கேட்டு ஓடிவந்து யசோதை பார்க்கையில்

அவன் புகழ் போலெங்கும் தயிர் பரவிக் கிடந்தது

வேதங்கள் வழிஉன்னைத் தேடுமன்பரைப்போல்

அன்னையும் கோபமுடன் உனைத்தேடித்திரிந்தாள்


கள்ளத்தனமாக வெண்ணையை பூனைக்கு

உரலின்மேலமர்ந்துநீ அளிப்பதைக்கண்டாள்

பொல்லாச்சினம் கொண்டு எல்லோர் முன்னிலும்

நடிக்குமுனைக் கயிற்றால் கட்டத்துணிந்தாள்


கட்ட எடுத்த கயிரெல்லாமெட்டாமல்

தவித்து யசோதை அயற்சியுடனமர்ந்தாள்

தாயின் வேதனை கண்டு தானே கட்டுண்ட

கண்ணனை விட்டவளும் பணிசெய்யச்சென்றாள்



கட்டுபட நினைக்குமனைவருக்குமுன்னாலுனை

கட்டி வைத்துப் பார்க்கும் யசோதையைக் கண்டு

நெட்டியது மூவுலகும் அதிசயித்து இன்று

குருவாயுரப்பாவுன் கருணைக்கீடேது


















No comments:

Post a Comment