கடல் மகள்
பல்லவி
மாமறைகள் போற்றும்
மகாலக்ஷ்மியை
தேமதுரத்தமிழால்
பாடித்துதித்தேன்
அனுபல்லவி
தாமரைப்பூவிலமர்ந்திருப்பவளை
நாமங்களாயிரமுடைய
கோமகளை
சரணம்
காமனையீன்ற கேசவன்
மனங்கவர்
பூமகளைப்புனித்திருமகளைக்கடல்மகளை
நாமகள் மலைமகள்
நேசிக்குமலைமகளை
தாமதமின்றியே
ஆண்டருள வேண்டுமென்று
No comments:
Post a Comment