பானைவயிற்றோன் ஆனைமுகத்தோன்
பல்லவி
பானைவயிற்றானை ஆனைமுகத்தோனை
கானமியற்றியே பாடித் துதித்தேன்
அனுபல்லவி
சேனைமுதலியென அனைவரும் போற்றும்
ஞானமூர்த்தியை கேசவன் மருகனை
சரணம்
ஊனம் களைந்தென் மனருள் நீங்கிட
ஈனச்செயல்களில் ஈடுபாடின்றியே
ஞானமும் தவமும் நன்னெறியறிவும்
நானென்றும் பெற்றிட நல்லருள் வேண்டியே
No comments:
Post a Comment