விஷ்வசேனர்
பல்லவி
சோழியலங்காரம்
புனைந்த கணபதியை
வேழமுகத்தோனை
மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஆழியில்
பள்ளிகொண்ட கேசவன் மருகனை
தாழ்சடை
கொண்ட சிவபெருமான் மகனை
சரணம்
ஊழ்வினைப்பயன்களைக் களைந்திடும் தும்பிக்கை
ஆழ்வானைக் கரிமுகனை விஷ்க்சேனரை
ஏழிசை
நாட்டியக் கலைகளின் ரசிகனை
ஏழையேன் எனக்கருள வேண்டுமெனப் பணிந்து
No comments:
Post a Comment