குருவாயுர் கேசவன்
பல்லவி
கண்ணா உன் வண்ணம்
கண்டு மனம் மயங்கினேன்
எந்நாளுமுன்னருகில்
இருக்கவே வேண்டினேன்
அனுபல்லவி
அண்ணாந்துன் முகம்
பார்த்து ஆசையில் மூழ்கினேன்
குருவாயூர்
நடையிலுன் குழலோசை கேட்டேன்
சரணம்
வெண்ணையுண்ட
வாயனுன் பூவிதழெழில் கண்டு
பெண் மனம்
பித்தாகி உன்னையே நாடினேன்
உண்ணவும்
உறங்கவும் மறந்து வாடினேன்
புண்ணியனே கேசவா ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment