Saturday, 15 March 2014

வினைதீர்க்கும் வினாயகன்




வினைதீர்க்கும் வினாயகன்


பல்லவி

திரு நீறுபூசிய திருமேனியுடையவனை
இருவினைப்பயன்களையும் கரிமுகனைப்பணிந்தேன்

அனுபல்லவி

குருவும் தந்தையும் தாயுமானவனை
கருணையளித்து அனைவரையும் காப்பவனை

சரணம்

திருவின் நாயகன் கேசவன் மருகனை
முருகனின் தமயனை விக்ன விநாயகனை
உருவில் பெரியவனைப் பெருவயிறு படைத்தவனை
அருமறைகள் போற்றும் ஆனைமுகத்தோனை



No comments:

Post a Comment