Tuesday, 11 March 2014

வேழமுகன்




    வேழமுகன்

    பல்லவி

    கணபதி நீயே கனிந்தருள் புரிவாய்
    வணங்கினேனுனதிரு செம்பொன்னடியே

    அனுபல்லவி

    கணங்களின் தலைவனே கருணைக்கடலே
    அணங்குகள் சித்தியும் புத்தியும் பணிந்திடும்

    சரணம்

    குணம் நிறைந்தவனே குருகுகன் சோதரனே
    தணலேந்தும் நெற்றிக் கண்ணன் மகனே
    இணையுனக்கில்லாத கேசவன் நேசனே

    துணையென உனையே நம்பித்துதித்தேன்



No comments:

Post a Comment