Monday, 3 March 2014

வெங்கடாசலபதி


வெங்கடாசலபதி

பல்லவி
வெங்கடாசலபதியை மனமாரத்துதித்தேன்
பங்கயனாபனைக்கேசவனை மாதவனை

அனுபல்லவி
திங்கள் திருமுகமும் மங்களவதனமும்
சங்கும் சக்கரமும் திருத்தங்கும் மார்புமுடை
சரணம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
பங்கய பதத்தானை பரமக்ருபாகரனை
மங்கையலமேலு மனங்கவர் நாயகனை
எங்கள் குலம் காக்கும் ஏழுமலையானை



No comments:

Post a Comment