Wednesday, 19 March 2014

கயிலைநாதன்




கயிலைநாதன்

பல்லவி

என்னுள்ளம் புகுந்தென்னை யாட்டுவிக்கும் சிவமே
வானோர் போற்றும் அமுதே துதித்தேன்

அனுபல்லவி

இன்னமுதே கன்னலே தெளிந்த தேனே
ஊனம்தனை நீக்கும் இன்னுடலே அழலே

சரணம்

காடுதனில் நெருப்பிடையே நின்றாடுமரனே
தோடுடைய செவியனே கேசவன் நேசனே
ஈடு இணையில்லா தேவாதி தேவனே
நாடுமடியார்க்கருளும் கயிலை மலையானே




No comments:

Post a Comment