மாயன்
பல்லவி
சொந்தம் எந்தனுக்கு மட்டுமே கண்ணா
பந்தம் நம்மிருவர்க்கும் மட்டுமே கண்ணா
அனுபல்லவி
அந்தரங்கமறிந்தெனையே ஆட்கொண்டவனே
அந்தரங்கநாதனே கேசவனே மாதவனே
சரணம்
மந்தகாசம் புரிந்தெனைக் கவர்ந்தவனே
சந்ததம் உன் நினைவே எந்தன் மனத்தில்
யந்திரமாய்த் திரிகின்றேன் காணாதுன்னை
வந்தணைத்து என் தாபம் தீர்த்தருள்வாய்
No comments:
Post a Comment