Monday, 3 March 2014

கண்ணா கண்மணியே




                          கண்ணா கண்மணியே

பல்லவி

கண்ணா  உன்னருகில் எப்போதும் இருந்திட
எண்ணியேயென் மனம் ஏங்கித்தவிக்குதே

அனுபல்லவி

புண்ணியனே கேசவா பெண் மனமறியாயோ
மண்ணில் பிறந்தயென் மனக்கவலை தீராயோ

சரணம்

மண்ணுண்டவாயனுன் கழுதில் மாலையாய்
கொண்டையில் பீலியாயானாலும் போதும்
பண்ணிசைக்கும் குழலாக கையிலிருந்தாலும்
தண்டையாய் காலில் கிடந்தாலும் போதும்!



No comments:

Post a Comment