அஞ்சனை…..
பல்லவி
அஞ்சனை மைந்தனை வாயுகுமரனை
நெஞ்சிலிருத்தி தினம் துதித்தேன்
அனுபல்லவி
பஞ்சவர் நேசன் கேசவன் ராமனாய்
விளங்கிய போதவர் தூதனாயிருந்த
சரணம்
பஞ்சாட்சரனின் அருள் பெற்ற மாருதியை
அஞ்சிலே ஒன்றைத் தாவிய வீரனை
வெஞ்சமரில் ராமனைச் சுமந்த வானரனை
தஞ்சமடைந்தேன் எனக்கருள வேண்டுமென
श्री राम दूत महा धीर रुद्र वीर्य समद्भव
अञ्जना गर्भ संभूत वायुपुत्र नमोस्तुते
No comments:
Post a Comment