Tuesday, 14 November 2023

என்னேரமுமுனை…….

 இன்றுமொரு புதுப்பாடல்🙏


  #என்னேரமுமுனை…….


                 பல்லவி


என்னேரமுமுனைப் பாடிக்கொண்டிருக்கும்

நன்னிலை எனக்கருள்வாய் ஶ்ரீலலிதாம்பிகையே


               அனுபல்லவி


 சென்ன கேசவன் சோதரியே கௌரி

 பன்னகபூஷணன் அகச்தீச்வரன் நாயகியே


                  சரணம்


 நன்னெறி கூறும் வேதங்களோதும்

 பொன்னடியார் பலர் உலவும் வீதியும்

 தென்னஞ்சோலையும் வயல்வெளியும்

 கன்னலெனக் கரும்பும் வாழையும் தழைக்கும்


 மின்னுமெழிலுடைய உழவுப் பெண்டிரும்

 தன்னலம் கருதாத விவசாயிகளும் நிறைந்த

 மன்னு புகழ் வையச்சேரியில் விளங்கும்

 தாயே ஈச்வரியே மங்களாம்பிகையே


महेश्वरी महाकाली महाग्रासा महाशना । अपर्णा चण्डिका चण्डमुण्डासुर-निषूदिनी ॥

No comments:

Post a Comment