என்ன சொல்லி உன்னை…….
பல்லவி
என்ன சொல்லி உன்னைப் பாட என் பிரிய கேசவனே
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
அனுபல்லவி
மின்னலைப் பழிக்கும் புன்னகை முகத்தோனே
கன்னலே இன்னமுதே பொன்னே மாமணியே
சரணம்
சின்னஞ்சிறு வடிவெடுத்து மூவுலகளந்தவனே
மின்னும் வைஜயந்தி கௌஸ்பமணிந்தவனே
வண்ணமிகு குழலேந்தும் ஶ்ரீவாசுதேவனே
பண்டரிபுரத்தரசே பாண்டுரங்க விட்டலனே
மின்னும் அணி விளக்கே நாராயணனே
தென்னிலங்கை சென்று ராவணனை வதைத்தவனே
குன்றைக் குடையாக்கி குளிர் மழை தடுத்தவனே
இன்றுமடியாரைக் காக்கும் புரந்தர விட்டலனே
காதலனும் வடிவம் கண்டேன்!
❤🙏
கட்டிக்கரும்பே..தேனே...கற்கண்டே,மாசறு பொன்னே,தெம்மாங்குத்தென்றலே,
கிட்டி வந்தவர் தமைக்குளிர்விக்கும்
கடலலையே! .கட்டுக்கடங்காத கருணைவெள்ளமே
எட்டு திக்கிலும் எழில் வீசும் வீசும் இலங்கொளியே!
பண்டரி புரத்து நல்முத்தே
நந்தாவிளக்கே!நாராயணா!வானவருக்கும் வரம் கொடுக்கும் வல்லானே! கஸ்தூரி திலகமணிந்து கெளஸ்துப மாலையாய் மிளிர்பவனே!
ரங்கா..ரங்கா! பாண்டு ரங்கா🙏🙏🙏 ...இனிய காலை வாழ்த்துக்கள்...🙏💢
No comments:
Post a Comment