என்ன பாட்டுப்பாட…..
பல்லவி
என்ன பாட்டுப் பாட தாயே மங்களாம்பிகையே
உன்னைப் போற்றியே இன்னும் நான்
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே மாயே
பன்னகாபரணன் மனங்கவர் நாயகியே
சரணம்
அன்னநடை சின்ன இடை மின்னலைப் பழிக்கும்
புன்னகைப் பூமுகம் உன்னத உருவம்
தன்னிகரில்லா தனிப்பெருந்தெய்வம்
என்றெல்லாம் வர்ணனைகள் பலப்பல செய்தோ
முன்னும் பின்னும் பலர் சொன்ன சொல் கோர்த்து
சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை ஆவேனோ
பொன்னே கன்னலே இன்னமுதே பூவே
என்னும் பொருளிலா வார்த்தைகளை சேர்த்தோ
No comments:
Post a Comment