#கண்ணனைக்கண்டு…..
பல்லவி
கண்ணனைக்கண்டு மனம் களிப்படைந்தேன்
வண்ணமுறக் காட்சிதரும் கேசவனை மாதவனை
அனுபல்லவி
எண்ணமெலாமவன் லீலைகளை நினைந்து
பண்ணிசைத்துப் பாடி பரவசமானேன்
சரணம்
தண்மதி ஒளிமுகம் தலைதனில் மயில்பீலி
கண்களிலழகுடன் கருமை தீட்டி
மின்னுமணிமணியும் கௌஸ்துபமும் பூட்டி
விண்ணவரும் மண்ணவரும் வியந்து நோக்கிடும்
அண்ணாந்து பார்க்கச்செய்யுமழகுத்திருமுகமும்
மண்ணையும் விண்ணையுமுண்ட பவள வாயும்
தண்டை கிண்கிணியணிந்த தாமரைப்பாதமும்
கொண்டவனை கோபியர் மனங்கவர்ந்த மாயனை
No comments:
Post a Comment