இன்றொரு புதுப்பாடல் 🙏
மங்களாம்பிகையே……
பல்லவி
மங்களாம்பிகையே மனங்கனிந்தருள்வாயே
சங்கரர் துதித்த காமாக்ஷி நீயே
அனுபல்லவி
பங்கயநாபன் கேசவன் சோதரி
திங்கள் பிறையணிந்தவளே எனை நீ ஆதரி
சரணம்
நங்கையர் போற்றும் நளினகாந்திமதி
நங்க நல்லூரில் நீ ராஜராஜேச்வரி
முங்கிடச்செய்யும் பொங்கும் பவக்கடல்
கடந்திட
நங்கூரம் நீயே ஶ்ரீலலி தாம்பிகையே
No comments:
Post a Comment