விநாயகனை …….
பல்லவி
விநாயகனை கணபதியைப் பணிந்தேன்
விநோதமான பல கோலம் கொண்டவனை
அனுபல்லவி
அனாத ரட்சகன் கேசவன் மருகனை
சனாதன தர்மம் காக்க உதவிடும்
சரணம்
அனுமனுமானை முகனுமாய் காட்சி தரும்
இனிய கணபதியை உறையூரில் கண்டேன்
ஏகதந்தனை தட்சிணாமூர்த்தியுடன்
புதுக்கோட்டை தலத்தில் துதித்து மகிழ்ந்தேன்
மாமன் கோவில் வேடந்தாங்கலில்
கோள்களொன்பதுடன் வீற்றிருக்கக்கண்டேன்
பதினொரு சுமுகர்கள் அருகருகே வீற்றிருக்கும்
அதிசயத்தைத் திருப்பாச்சூரில் கண்டேன்
முத்தாலங்குறிச்சியில் முக்குறுணி கணபதியும்
மல்லியம் திருத்தலத்தில் மாயக் கண்ணனுடனும்
சங்கு சக்கரத்துடன் சக்ரபாணிக் கோவிலிலும்
கணபதி புலேயென ரத்தினகிரியிலும்
வியத்தகு விநாயகர் ஆலயங்கள் :-
அனுமனோடு ஆனைமுகன் :-
திருச்சி - உறையூர் நவாப் தோட்டம் என்ற பகுதியில் வயல் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் ஒரே சந்நதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்க, அவரது வலது பக்கத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை ஒரே சந்நதியில் வழிபட கிரகங்களின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
ஏகதந்தனும் தட்சிணாமூர்த்தியும் :-
புதுக்கோட்டை மாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில். தெற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் உள்ள சந்நதி ஒன்றில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் அருகருகே அமர்ந்து காட்சி தருவது விசேஷ அம்சம் எனப்படுகிறது. இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாது என்று கூறப்படுகிறது.
மாமன் கோயிலில் மருமகன் :-
சென்னை-வேடந்தாங்கல் அருகேயுள்ள அம்ருதபுரி என்ற தலத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். இங்கு அருள்புரியும் விநாயகரை நவகிரக விநாயகர் என்று போற்றுவர். எட்டு அடி உயரம் கொண்ட இந்த விநாயகரின் நெற்றியில் சூரியனும், வயிற்றுப்பகுதியில் சந்திரனும், வலதுகாலில் செவ்வாயும், கீழ்கையில் புதனும், தலைப்பகுதியில் குருவும்-இடதுமேல் கையில் ராகுவும், இடதுகாலில் கேதுவும் காட்சி தருகிறார்கள். மேலும் இவரது பின்புறம் யோக நரசிம்மர் திருஉருவமும் உள்ளது. இவரை வழிபட அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
திருப்பாச்சூரில் பதினோரு சுமுகர்கள் :-
விநாயகரை சுமுகர் என்றும் அழைப்பர். அதனாலேயே சுமுகாய நமஹ... என்றும் அர்ச்சிப்பார்கள். ஒருசமயம் மகாவிஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த பதினாறு செல்வங்களில் பதினொன்றை இழந்தார். இதனை மீண்டும் பெறுவதற்கு சிவபெருமானை வேண்டினார்.
அவரது ஆலோசனைப்படி திருபாச்சூர் வாசீஸ்வரர் ஆலயத்தில் பதினொரு விநாயகர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற்றார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் பதினொரு விநாயகர்கள் ஒரே இடத்தில் காட்சி தருகிறார்கள்.
இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் இரண்டு சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப் புறத்தில் ஐந்து விநாயகர்களும் உள்ளனர். சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் அமைந்துள்ளது.
முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர் :-
திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்க
வித்தியாசமாக காட்சியளிக்கும் விநாயகர் ஆலயங்கள்.
அனுமனோடு ஆனைமுகன் -திருச்சி - உறையூர்.
ஏகதந்தனும் தட்சிணாமூர்த்தியும் -புதுக்கோட்டை.
மாமன் கோயிலில் மருமகன் - சென்னை-வேடந்தாங்கல்.
திருப்பாச்சூரில் பதினோரு சுமுகர்கள் -திருபாச்சூர் வாசீஸ்வரர் திருக்கோயில்.
முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர் - திருநெல்வேலி மாவட்டம்.
ஓங்கார வடிவில் லம்போதரர் - வடாற்காடு மாவட்டம்.
சங்கு பாணி விநாயகர் - காஞ்சிபுரம்.
வைஷ்ணவ விநாயகர் - மதுரை தெற்கு மாசிவீதி.
சங்கு சக்கர விநாயகர் - தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில்.
கணபதி புலே - ரத்னகிரி ரயில் நிலையம்.
No comments:
Post a Comment