நானுனை நினைக்காத….
பல்லவி
நானுனை நினைக்காத நேரமுண்டோ
வான் புகழ் கொண்டவளே மங்களாம்பிகையே
அனுபல்லவி
ஆனிறை மேய்க்கும் கேசவன் சோதரியே
கானிடை திரியுமகச்தீச்வரன் நாயகியே
சரணம்
தானெனுமகந்தை கொண்ட அரக்கரை மாய்த்தவளே
ஆனந்தமானவளே அகந்தையையழிப்பவளே
ஊனுயிர் தந்தெனைக் காக்குமுத்தமியே
தேனுந்தன் திரு நாமம் தினமும் துதித்தேன்
No comments:
Post a Comment