படித்தேன்! ரசித்தேன்! எசப்பாடல் புனைந்தேன்!!
நம்பியுனை…..
பல்லவி
நம்பியுனைப் பணிந்தேன் நாராயணனே
வெம்பவக் கடல் கடக்க உன் பதமே கதியென
அனுபல்லவி
தும்புரு நாரதர் நரர் சுரர் நான்முகன்
சம்புவுடனிந்திரனும் கரம் பணிந்தேத்துமுனை
சரணம்
அன்பே கேசவனே உனது பொன்னடிகளை
அன்புடன் வணங்கியே அடியாருனை அடைந்தனர்
அவ்விதமே நானுமுனையுருகித்துதித்தேனே
உனையடையாமலே இப்பிறவி கழிந்திடுமோ🙏
No comments:
Post a Comment