Tuesday, 7 November 2023

விண்ணவர் வியந்தேத்தும்……

 

                   விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பொருள் விளக்கத்துடன்.... 

இன்று முதல்....

ஸ்ரீ_விஷ்ணு_ஸஹஸ்ரநாமம்_1

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).

விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்  சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)

சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்

ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்

த்யாயேத் - தியானிக்கிறேன்

சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும். ஓம் நமோ நாராயணா !

                                         விண்ணவர் வியந்தேத்தும்……

                                                    பல்லவி

                                 விண்ணவர் வியந்தேத்தும் ஶ்ரீமன் நாராயணனை      

                                 பண்ணிசைத்துப் பாடி மனமாரத்துதித்தேன்      

                                                   அனுபல்லவி

                                 புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் காட்சி தரும்                                                   

                                 மண்ணுண்ட வாயனை மாதவனைக் கேசவனை

                                                        சரணம்

                                  வெண்பட்டாடை அணிந்த கோவிந்தனை

                                  கண்கவரழகனைப் புன்னகை முகத்தோனை

                                  தண்மதி நிறத்தவனை நான்கு கரமுடையவனை

                                  எண்ணிலாத் தடைநீங்க வேண்டுமென வேண்டி

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

We Meditate on Sri Vishnu) Who is Wearing White Clothes, Who is All-Pervading, Who is Bright in Appearance like the Moon and Who is Having Four Hands2: Who is Having a Compassionate and Gracious Face; One should Meditate on Him to ward of all Obstacles.



No comments:

Post a Comment