உனைப் பாடி……
பல்லவி
உனைப் பாடி மகிழ்ந்தேன் தாயே காமாக்ஷி
எனைத் தேடிவந்து தரிசனம் தந்த
துரிதம்
அனங்கன் நரர் சுரர் நான்முகனிந்திரன்
சனகாதி முனிவர்கள் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
முனைப்புடன் துதிப்பவர் வினைப்பயன் களைபவளே
நினைப்பவர் மனங்களில் நிலைத்திருப்பவளே
சரணம்
தினையளவுத்துதித்தாலும் பனையளவுப் பயன் தரும்
சுனை நீராய்ச்சுரக்கும் கருணைக்கடலே
தனைத் துதிக்குமடியாரின் நலம் பேணும் நாயகியே
அனைத்தும் நீயே கேசவன் சோதரியே
No comments:
Post a Comment