Sunday, 19 November 2023

அடைக்கலமடைந்து….

 கார்த்திகை மாதம் பிறந்தாலே காலாஷ்டமி  நினைவு தான் வரும்.எங்க ஆட்கொண்டார் காலாஷ்டமி அபிஷேகம், சுவாமி புறப்பாடு மிகவும் பிரசித்தி. பயத்தில் பெரிய பயம் மரணபயம். அந்த மரணபயத்தையே பயந்தோடச்  செய்யும் ஷேத்ர பாலக கால சம்ஹார மூர்த்தி.

விடையேறிய வள்ளலே 

வடை சாற்றியே வந்தானே

விடை காணா வாழ்வதில்

அடைக்கலமென பணிந்தவரின்

உடைய வினை தனை

உடைத்திட்டே க்ஷேத்ர பாலகனாய்

மடை திறந்த வெள்ளெமெனருள் புரிந்து

தடை தனை தகர்த்திட்டே

சடை முடி தாங்கிய ஐயாறனே

அடை காத்தே காத்திடுவானே ஆட்கொண்ட ஈஸ்வரனாய்

Kamakshi Muthukrishnan


                                      அடைக்கலமடைந்து….


                                               பல்லவி

                               அடைக்கலமடைந்து  உனை பணிந்தேன் சிவனே

                               படைக்கலனாய் சூலமேந்தும் காலாந்தகனே

                                               அனுபல்லவி

                               சடைமுடியில் மங்கை கங்கையையேந்துமரனே

                               விடை வாகனனே பஞ்சநதீசனே

                                                   சரணம்

                               நடைவந்துனைப் பணிந்தேன் நமச்சிவாயனே                         

                               மடைதிறந்த வெள்ளமெனக் கருணை மழை பொழிந்து

                               உடைய வினை தீர்க்க உனதருளை வேண்டினேன்

                              தடையனைத்தும் தகர்த்து எனக்கருள வேண்டுமென

No comments:

Post a Comment