சொக்கியே உமையே கௌரி…….
பல்லவி
சொக்கியே உமையே கௌரி சொக்கநாதன் நாயகியே
சொக்கிடும் உந்தனழகில் சொக்கித்தான் போனேன் நானே
அனுபல்லவி
சக்கரக் கையன் கேசவன் சோதரியே
அக்கிரமம் செய்த அரக்கரை மாய்த்தவளே்
சரணம்
வக்கிரக் காளி நீயே வடிவுடை அம்மனும் நீயே
சக்தியே உமையே கௌரி சாம்பவி சங்கரி மாரி
சுக்கிரன் போற்றும் தேவி சுகபாணி நித்யகல்யாணி
தக்கனின் மகளே கௌரி ஶ்ரீலலிதாம்பிகையே
No comments:
Post a Comment