Wednesday, 1 November 2023

அய்யனைக் கேசவனை…..

95. திருமெய்யம்

     மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்
          கொய்யார் குவளையும், காயாவும் போன்றிருண்ட
     மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
          கையானை, கை தொழாக் கையல்ல கண்டோமே - (2016)
                               - பெரிய திருமொழி 11-7-5 

MeaningThe Lord has a dark hue like the deep ocean, the blue gem mountain, the moisture- laden cloud, the dazzling blue lily, and the dark blue kAyA flower.  He bears a conch in his hand and is the symbol of Truth. He dwells in the foothills of Thirumeyyam.  It is obvious that those who do not worship him with folded hands might as well have no hands.


                     அய்யனைக் கேசவனை…..

                                பல்லவி
                அய்யனைக் கேசவனை மெய்ப்பொருளை
                கைதொழாதவர் கை வெறும் உலக்கையே
                            அனுபல்லவி
                பையத்துயிலும் நாராயணனை
                தையல் திருமகளைத் திருமார்பில் வைத்திருக்கும்
                                   சரணம்
                நீலமேகமும்  கருங்கடலுமொத்ததும் 
                காயம்பூவும் கருங்குவளை வண்ணமுடன்
                கோலக் கரத்தில் சங்கேந்தி நிற்கும்
                திருமெய்யம் தலத்துறை மெய்யனை

No comments:

Post a Comment