முப்பொழுதும் துதித்தேன்
பல்லவி
முப்பொழுதும் துதித்தேன் தாயே எனக்கருள்வாய்
துப்புரவுடனே அகம் புறம் துலக்கி
அனுபல்லவி
கொப்புடை நாயகியே கேசவன் சோதரி
சப்பர மஞ்சத்தில் வீற்றிருப்பவளே
சரணம்
காஞ்சி காமாக்ஷியே சமயபுரம் மாரியே
பாம்புரம் நாகம்மா கோபுரத்து நாயகியே
மடப்புரம் காளியே மாளிகைபுரம் தேவியே
எப்புறமும் நீயே துணை உன் கழலடியே சரணமம்மா
No comments:
Post a Comment