அங்கமாறும் வேதநான்கும்* ஆகிநின்ற அவற்றுளே,*
தங்குகின்ற தன்மையாய்!* தடங்கடல் பணத்தலை,*
செங்கண் நாகணைக் கிடந்த* செல்வமல்கு சீரினாய்,*
சங்கவண்ணம் அன்னமேனி* சார்ங்கபாணி யல்லையே?*.
திருமழிசையாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீசாரங்கபாணிபெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏
ஆறங்கமும் நான்மறையும்….
பல்லவி
ஆறங்கமும் நான்மறையும் தாங்குகின்ற திருமாலை
சாரங்கபாணியைக் குடந்தையில் துதித்தேன்
அனுபல்லலவி
ஶ்ரீரங்கநாதனை ஶ்ரீராமச்சந்திரனை
பாரெங்கும் புகழ் விளங்கும் சென்னகேசவனை
சரணம்
மார்பினில் திருமகளை வைத்திருப்பவனை
சீரிய சங்கினையொத்த மேனியுடையவனை
கீறிய நாவுடைய நாகத்தணையானை
வாரி வழங்கும் செல்வமுடையவனை
No comments:
Post a Comment