இன்றுமொரு புதுப் பாடல்!
இன்றுனை……
பல்லவி
இன்றுனைப்போற்றிப்பாட பல்லவி நீயே சொல்வாய்
கன்று தாய்ப்பசுவையழைப்பது போலுனை அழைத்தேன்
அனுபல்லவி
வென்றரக்கன் பண்டனை வதைத்தவளே கௌரி
குன்றைக் குடையாக்கிய கேசவன் சோதரி
சரணம்
அன்றுமின்றுமென்றும் துணை நீயே
நன்றும் தீதுமனைத்தும் நீயே
உன்றனருளாலன்றோ உலகமியங்குவது
மன்னு புகழீச்வரியே மங்களாம்பிகையே
भवानी भावनागम्या भवारण्य-कुठारिका । भद्रप्रिया भद्रमूर्तिर् भक्त-सौभाग्यदायिनी ॥
No comments:
Post a Comment