Saturday, 4 November 2023

“ ஶ்ரீ வைத்தியநாத அஷ்டகம்”


     

             “ ஶ்ரீ வைத்தியநாத அஷ்டகம்”

                (ஆதிசங்கரர் இயற்றியது)


                          பல்லவி

          ஶ்ரீவைத்தியநாதனை தினமும் துதிப்போம்

          தேவையில்லாத மரண பயம் களைவோம்

                        அனுபல்லவி

          பாவை தையல் நாயகியின் நாயகனை

          ஶ்ரீவைகுண்டபதி கேசவன் நேசனை

                          சரணம்

          ஶ்ரீராமலக்ஷ்மணர் ஜடாயு துதித்தவரை

          சூரியனும் செவ்வாயும் மறைகளும் முருகனும்

          பாரோரும் பணிந்தேத்தும் நீலகண்டனை

          ஶ்ரீவைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          கங்கையை சடையிலேந்தும் கங்காதரனை     

          அங்கமில் காமனைக் காலனை வதைத்தவனை

          அமரர்  தொழுதேத்தும் பிறையணிந்த சேகரனை

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          அடியாரைக் காப்பவனை திரிபுரமெரித்தவனை

          கொடியாரை அழிப்பவனை பிநாகபாணியை

          வடிவார் சோதியை அகிலலோகநாயகனை         

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          வாதம் முதலான அனைத்து நோய்களுக்கும்

          பேதமளிப்பவனை  முனிவர்கள் பணிந்திடும்

          வேதப்பொருளை முக்கண்ணனை

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          கண் காது வாய்ப் பேச்சு விளங்காதவரை

          வெண் குட்டம் வந்தோரை நடக்கமுடியாதவரை

          திண்ணமாய் குணப்படுத்தும் புண்ணியனை ஈச்வரனை

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          வேத வேதாந்தங்கள் போற்றுமீசனை

          நாதனை முனிவரும் வணங்கும் மலர்ப்பாதனை

          மாதொரு பாகனை மூவருமானவனை

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          பூத பைசாச  சூனிய வினைகள்

          யாதும் நீங்கிட திருக்குளத்தில் முங்கிடவும்

          விபூதி வேம்பு மண்ணளித்திடவும் செய்யும்          

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்


          ஆலமுண்ட கண்டனை எருதுக் கொடியோனை

          கோலமுடன் மலர் நீறு சந்தனமணிந்தவனை

          பாலாம்பிகை நாதனை பிறப்பிறபறுப்பவனை

          ஶ்ரீ வைத்தியநாதனை சிவனைத் துதித்தேன்     

                                    *****       

 श्री वैद्यनाथाष्टकम्

श्रीराम सौमित्रि जटायुवॆद-
षडाननादित्य कुजार्चिताय ।
श्री नीलकण्ठाय दयामयाय
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ १ ॥

I salute that God Shiva, Who is the king among physicians,Who is worshipped by Rama and Lakshmana,Who is woshipped by Jatayu, Who is worshipped by the Vedas, Who is worshipped by Lord Subrahmanya, Who is worshipped by the Sun God, Who is worshipped by the Mars God, Who is having a blue neck, and who is the personification of mercy.

गंगाप्रवाहॆन्दु-जटाधराय
त्रिलॊचनाय स्मरकालहन्त्रॆ ।
समस्त दॆवैरपि पूजिताय
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ २

I salute that God Shiva, Who is the king among physicians, Who wears the flow of Ganges and the moon on his head, Who has three eyes, Who had killed the God of love and death,
And who is worshipped by all devas.

भक्तप्रियाय त्रिपुरान्तकाय
पिनाकिनॆ दुष्टहराय नित्यम् ।
प्रत्यक्षलीलाय मनुष्यलॊकॆ
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ३ ॥

I salute that God Shiva, Who is the king among physicians, Who is the lover of his devotees, Who has destroyed the three cities, Who holds the bow called Pinaka, Who destroys bad people daily, and who plays in the world of humans.

प्रभूतवातादि समस्त रॊग-
प्रणाशकर्त्रॆ मुनिवन्दिताय ।
प्रभाकरॆन्द्वग्निविलॊचनाय
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ४ ॥


I salute that God Shiva, Who is the king among physicians, Who cures all great diseases like rheumatism and arthritis, Who is saluted by great sages,and to whom, the Sun god, Moon and God of fire are eyes.

वाक्श्रॊत्रनॆत्राङ्घ्रिविहीनजन्तॊः
वाक्श्रॊत्रनॆत्राङ्घ्रिमुखप्रदाय ।
कुष्ठादिसर्वॊन्नतरॊगहन्त्रॆ
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ५ 


I salute that God Shiva, Who is the king among physicians, Who blesses those beings who have lost their speech, hearing, sight and ability to walk, With these abilities and who provides cure for devastating diseases like leprosy.

वॆदान्तवॆद्याय जगन्मयाय
यॊगीश्वरध्यॆयपदांबुजाय ।
त्रिमूर्तिरूपाय सहस्रनाम्नॆ
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ६ ॥

I salute that God Shiva, Who is the king among physicians, Who can be known through vedantha, Who is spread throughout the universe, Who has a lotus feet that is meditated upon by great sages, Who is of the form of the holy trinity and who has thousand names. 

स्वतीर्थ मृत् भस्मभृदंगभाजां
पिशाचदुःखार्तिभयापहाय ।
आत्म स्वरूपाय शरीरभाजां
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ७ ॥

I salute that God Shiva, Who is the king among physicians , Who removes all sufferings Caused by bad spirits, sorrows and fears by dip in his holy tank, by the holy ash in the temple, and by the mud below the Neem tree of the temple, and who is the personification of soul,Occupying human body.

श्री नीलकण्ठाय वृषध्वजाय
स्रग्गन्धभस्माद्यपिशॊभिताय ।
सुपुत्र दारादि सुभाग्यदाय
श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ८ ॥

I salute that God Shiva,Who is the king among physicians,Who has a blue neck,Who has the the bull on his flag,Who shines by flowers, sacred ash and sandal, Who grants good children and good wife and who blesses us with all good luck.

वालाम्बिकेश वैद्येश भवरोगहरेति च।
जपेन्नामत्रयं नित्यं महारोगनिवारणम्॥९॥

Those who recite this prayer thrice a day with devotion and pray the Lord Vaidyanatha, Who is with his consort Balambika, and who removes the fear of birth and death would get cured of all great diseases. 

|| इति श्री वैद्यनाथाष्टकम् ||

No comments:

Post a Comment