Saturday, 25 November 2023

அகிலாண்டேச்வரியே……




                                    அகிலாண்டேச்வரியே……



                                               பல்லவி

                            அகிலாண்டேச்வரியே மங்களாம்பிகையே
                            சகலமும் நீயே  காத்தருள்வாயே

                                                துரிதம்

                           மகபதியும்,ரதிபதியும், பசுபதியும், ஶ்ரீபதியும்,
                           சுகசனகாதியரும், சரச்வதியின் பதியும்,
                           புகலிடம் நீயெனக் கரம் பணிந்தேத்தும்,
                           சுகபாணி, கல்யாணி, கேசவன் சோதரியே
                                          
                                             அனுபல்லவி

                            மகிடனை மாய்த்த மாகாளி பைரவியே
                            அகச்தீச்வரனின் ஒரு பாகத்தமர்ந்தவளே
                                    
                                                சரணம்

                            பகலவன் ஒளியையும் மிஞ்சுமொளியுடையவளே                      
                            குகபெருமான் கணபதி வணங்கிடும் தாயே
                            இகபரசுகமளிக்கும் ஶ்ரீலலிதாம்பிகையே
                            புகழ்மிகு வையச்சேரியிலுறைபவளே



ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று
வழங்கப்படுவார்கள்.  வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர்.  இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்; எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி
முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம்
வாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராக்ஷங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர்
விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.

                          

No comments:

Post a Comment