“இதுவொரு புதுப்பாடல்”
வையச்சேரி வளர்…..
பல்லவி
வையச்சேரி வளர் மங்களாம்பிகையை
தையலை உமையை தினமும் துதித்தேன்
துரிதம்
அமரரசுரர் அமரேந்திரனுடன் குமரன் கணபதி
ரதியின் நாயகன்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
அனைவரும் வணங்கி கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
பையத்துயிலும் கேசவன் சோதரியை
வையகம் போற்றும் அகிலாண்டேச்வரியை
சரணம்
மையல் கொண்டு சிவனிடமமர்ந்தவளை
ஐயையெனும் மாயையை மலைமகளை
சயிலேந்திரன் மகள் கற்பகத்தை
மெய்யறிவுதந்த ஶ்ரீலலிதாம்பிகையை
इन्द्रगोप-परिक्षिप्त-स्मरतूणाभ-जङ्घिका ।
गूढगुल्फा कूर्मपृष्ठ-जयिष्णु-प्रपदान्विता ॥
No comments:
Post a Comment