Wednesday, 15 November 2023

#பயணிக்கும் #போதுமுனையே…..

 #பயணிக்கும் #போதுமுனையே…..


                  பல்லவி


பயணிக்கும் போதுமுனையே துதித்தேன்

தயரதன் மகனே ராமா எனக்கருள்வாய்


                அனுபல்லவி


துயரறு சுடரடியேயென் துணை கேசவனே

புயங்கனும் போற்றிய நாமமுடையவனே


                     சரணம்


உயர்ந்த பண்புகள் பல உடையவனே

அயர்விலாதவனே அயோத்தி மன்னனே

கயல் விழி ஜானகியின் மனங்கவர் நாயகனே

ஜயராமன் நீயே வெற்றியின் இருப்பிடமே


ॐ आपदामहरतारम् दातारम् सर्वसम्पदाम्

लोकाभिरामम् श्रीरामं भूयो भूयो नमाम्यहम्

No comments:

Post a Comment