உனை வணங்க….
பல்லவி
உனை வணங்க ஓராயிரம் பெயர் தந்த உத்தமனே
எனதுடல் பொருளாவியனைத்துமுனதே
அனுபல்லவி
மனத்துள் உனையன்றி வேறில்லை கேசவனே
எனக்கருளும் பரந்தாமனென்றும் நீயே துணை
சரணம்
நாமமாயிரத்தின் பொருளாய் விளங்கும்
நாராயணனே நான்மறை போற்றும்
சீராளனுனையே கரம் கூப்பி சிரம் தாழ்த்தி
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினேன்
तमेव चार्चयन्नित्यं भक्त्या पुरुषमव्ययम् ।
ध्यायन् स्तुवन् नमस्यंश्च यजमानस्तमेव च ॥
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 11
தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச:
ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன். ஓம் நமோ நாராயணா !
No comments:
Post a Comment