தொண்டனை…..
பல்லவி
தொண்டனைத் தோழனாய்ச் செய்த ஶ்ரீராமனை
தண்டனிட்டுப் பணிந்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
கண்டவர் மனங்களை களிப்புறச் செய்பவனை
பண்டரி புரத்துறை பாண்டுரங்க விட்டலனை
சரணம்
அண்ட சராசரங்கள் போற்றும் கேசவனை
மண்டோதரியும் கொண்டாடிய ரகுவரனை
பண்டொரு நாளரக்கி தாடகையை் கொன்றவனை
புண்டரீகாக்ஷனைப் புருஷோத்தமனை
No comments:
Post a Comment