கங்கையைத் தாங்கும்…..
பல்லவி
கங்கையைத்தாங்குமகச்தீச்வரனின்
பங்கிலுறை மங்களாம்பிகையைப்பணிந்தேன்
அனுபல்லவி
சங்கும் சக்கரமுமேந்தும் கேசவனின்
தங்கையை சங்கரியை உமாமகேச்வரியை
சரணம்
மங்களம் தருபவளை மகாதேவியை
சங்கடமிடர் களையும் அங்கையற்கண்ணியை
அங்கமில் மதனுக்கருள் செய்த கௌரியை
எங்கும் நிறைந்திருக்கும் ராஜராஜேச்வரியை
சிங்கவாகனந்தனில் வீற்றிருப்பவளை
பொங்கரவணிந்த புவனேச்வரியை
திங்கள் பிறை சூடிய காமேச்வரியை
மங்காத புகழ் மேவும் வையச்சேரி வளர்
No comments:
Post a Comment