பிறவிப்பிணி நீங்க….
பல்லவி
பிறவிப்பிணி நீங்க கேசவனுனைத்துதித்தேன்
இறைவா நீயே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
மறவாதுன் திருவடியே தினம் சரணடைந்தேன்
கறவையைக் கன்று அழைப்பது போலழைத்து
சரணம்
உறவனைத்தும் உதறித் தள்ளி வைத்தே நான்
பரம்பொருளுனையே கதியெனப் பணிந்தேன்
பறவையரசன் கருடன் மீதேறி
பறந்து வந்து காத்தருள்வாய் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment