என னவென்றுனைப் பாட…..
பல்லவி
என்னவென்றுனைப்பாட அன்னை மங்களாம்பிகையே
சொன்னதையே சொல்லி உனை சலிப்படையச் செய்யாமல்
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே கேசவன் சோதரி
உன்னைத் துதித்திடுமடியார்கருள்பவளே
சரணம்
பன்னகாபரணன் அகச்தீச்வரன் உன்னை
தன் மடியில் வைத்திருக்கும் தகைமையுடையவளே
தன்னிகரில்லாத தனிப்பெருந்தெய்வமே
கன்னலே கற்பகமே கருநிற மாணிக்கமே
மின்னல் கொடியிடையாளே இன்னமுதே தேனே
புன்னகை முகத்தில் திங்கள் பிறையணிந்தவளே
அன்னம் போல் நடையுடைய அழகுப் பெட்டகமே
மன்னு புகழ் வையச்சேரி வளர் மரகதமே
No comments:
Post a Comment