நானுந்தனடிமை….
பல்லவி
நானுந்தனடிமை தசரத ராமா
ஏனிந்தப் பாராமுகம் ஶ்ரீரகு ராமா
அனுபல்லவி
வானும் புவியம் அளந்த வாமனனே
தேனுந்தன் திருநாமம் மாதவனே கேசவனே
சரணம்
பானு குல திலகனே பரம புருஷனே
மானிடனாய்ப் பிறந்து லீலைகள் புரிந்தவனே
கானகம் சென்று தந்தை சொல் காத்தவனே
ஆனந்தமளித்திடுமழகிய ரகுவரனே…..( நானுந்தனடிமை….)
கானுறை முனிவரும் வானுறை தேவரும்
பானுவும் சந்திரனும் தீனருமிந்திரனும்
ஊனுயிரனைத்தும் துதித்துப் போற்றும்
தீனசரண்யனே கோதண்ட ராமனே…..( நானுந்தனடிமை…)
தானெனுமகந்தை கொண்ட அரக்கரை வதைத்தவனே
மானைத் தேடியே அதன் பின் சென்றவனே
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கிட
கோனுனைப் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்…(நானந்தனடிமை…)
No comments:
Post a Comment