Friday, 3 November 2023

உனது பதம் ……

    உனது பதம் ……


                  பல்லவி


  உனது பதம் பணிந்தேன் மங்களாம்பிகையே

  தினமுனைப் பாட வரமருள்வாய் தாயே


                 அனுபல்லவி


  அனந்தசயனன் கேசவன் சோதரி

  கனகசிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே


                       சரணம்

 அனங்கனினெதிரி அகச்தீச்வரனின்

 ஒருபாகத்தமர்ந்தவளே உமா மகேச்வரியே

 உனதருளில்லையேல் உலகமுய்யுமோ

 வனப்பு மிகுந்தவளே வையச்சேரி வளர்

No comments:

Post a Comment