பாண்டுரங்க ஹரி ராமகிருஷ்ண ஹரி…..
பல்லவி
பாண்டுரங்க ஹரி நீ ராமகிருஷ்ண ஹரி நீ
வேண்டுவோர் வேண்டும் வரமருளும் கேசவன் நீ
அனுபல்லவி
தீண்டுமரவின் மேல் துயிலும் நாராயணன் நீ
காண்பவர் மனங்கவரும் மாதவன் பரந்தாமன் நீ
சரணம்
தூணினைப் பிளந்து வந்த நரசிம்மனும் நீ
சாணுரன் முஷ்டிகனை மாய்த்த ஶ்ரீகிருஷ்ணன் நீ
வேணுவை இசைக்கும் வேணுகோபாலன் நீ
நாணும் கோபியரின் மனங்கவர்ந்த கண்ணன் நீ
No comments:
Post a Comment