நாமமொன்றை நாவார…..
பல்லவி
நாமமொன்றை நாவார உரைக்கும் வரமருள்வாய்
நாமங்களாயிரமுடைய நாராயணனே
அனுபல்லவி
காமனைப் பிரமனைப்படைத்த கேசவனே
ஆமருவியப்பனேஅருமாகடலமுதே
சரணம்
பூமகளைத் திருமார்பில் வைத்திருக்கும் திருமாலே
தாமோதரனே தரணியை மீட்டவனே
பாமரரும் பண்டிதரும் பணிந்தேத்தும் வாமனனே
தூமலர் தூவியுன் தாமரைப் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment