சதா உனை……
பல்லவி
சதா உனைத் துதித்தேன் சதாசிவனே
முதம் தருவாயென உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
கதாதரன் சென்னகேசவன் நேசனே
உதாரசீலனே உமையாள் நாயகனே
சரணம்
புதன் முதலனைத்து கோள்களும் பணிந்திடும்
சுதாகரனை சூடிய சிவனே
பதாரவிந்தம் வணங்கிடுமெனையே
உதாசீனம் செய்யாமலாண்டருள்வாய்
No comments:
Post a Comment