சோட்டானிக்கரை பகவதியை…..
பல்லவி
சோட்டானிக்கரை பகவதியைத் துதித்தேன்
கூப்பிட்ட குரலுக்கு நான் வருனென்ற
அனுபல்லவி
ஏட்டன் கேசவனின் அன்பு சோதரியை
காட்டின் நடுவே கோயில் கொண்ட
சரணம்
கேட்டவர் கேட்ட வரங்களைத் தருபவளை
மாட்டின் வடிவில் காட்சி தந்த மாயையை
பாட்டின் பொருளாய் வைத்துப் பாடியே
நாட்டமுடன் அழைத்தேன் காத்தருள்வாயென
அம்மே நாராயணா தேவி நாராயணா
பத்ரே நாராயணா லக்ஷ்மி நாராயணா
No comments:
Post a Comment